Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் புகழாரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
'கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களைத் தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு' என்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் பயின்று, நாட்டின் மிகச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். அவரது முன்னேற்றமும் சாதனைகளுமே என் போன்ற எளிய பின்புலத்திலிருந்து வந்த பலருக்கும் ஊக்கமாக இருந்தது.
நாட்டின் வளர்ச்சி, கல்வியின் சிறப்பு, இளைஞர்களின் முன்னேற்றம் என ஆதர்ச சிந்தனையாளராக இருந்தவர். ஒரு மக்கள் ஜனாதிபதியாக இருந்து 'இந்தியா வல்லரசு' என்ற மிகப்பெரும் இலட்சியத்தைச் சுமந்த அப்துல் கலாம் அவர்களின் கனவை அவர் பிறந்தநாளான இன்று நிறைவேற்ற உறுதியேற்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
Hindusthan Samachar / P YUVARAJ