Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் கொத்தவால்சாவடி நெரிசலுக்கு தீர்வாக, 1996ல் கோயம்பேடில், 295 ஏக்கர் பரப்பில் காய், கனி, பூ விற்பனைக்கான மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டப்பட்டது.
இதில், 3,100 கடைகள் உள்ளன. இக்கடைகளில் பெரும்பாலுமான ஊழியர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.
இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர். மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூமார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b