Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச)
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சாலை வெட்டு பணிகளுக்கு தடை; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது
பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட எந்த நிறுவனங்களும் சாலையில் பள்ளம் தோண்ட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நடவடிக்கைக்காக சாலையில் பள்ளம் தோண்ட மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும், அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பேருந்துகள் பயணிக்கும் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் பல்வேறு சேவை துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டும் பணிகள் அனைத்தையும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ