Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
பத்திரிகை என்ற பெயரில் முரசொலி என்னும் அவதூறு பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தவெக வெல்லும், திமுக கொல்லும்.
பத்திரிகை என்ற பெயரில் முரசொலி என்னும் அவதூறு பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கும் அதிகாரப் போதை பசிக் கொண்ட பாசிசவாதிகள் எங்களை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
அதிகார பசிக்காக நம் தாய் தமிழ் உறவுகளான ஈழத் தமிழர்களை நம் கண்ணெதிரே கொன்று குவித்த கும்பல்தான் இந்த முரசொலி கும்பல்.
அதிகாரப் பசிக்காக ஊதிய உயர்வு கேட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட ஏழை, எளிய தொழிலாளர்களை காவல்துறையை வைத்து தடியடி நடத்தி படுகொலை செய்த கும்பல்தான் இந்த முரசொலி கும்பல்.
அதிகாரப் பசிக்காக ஐயா காமராஜர் அவர்களை கொச்சைப்படுத்தி பேசிய கும்பல்தான் இந்த முரசொலி கும்பல்.அதிகாரப் பசிக்காக தந்தை பெரியார் அவர்களை இழிவுப் படுத்தி எழுதிய கும்பல்தான் இந்த முரசொலி கும்பல்.
அதிகாரப் போதை பசிக்காக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை தரம் தாழ்ந்து பேசிய கும்பல்தான் இந்த முரசொலி கும்பல். முரசொலியை பத்திரிகை என்று சொல்வதை விட விஷத்தை கக்கும் விஷப் பாம்பு என்று சொல்லலாம்.
கரூரில் 41 பேரின் இறப்பிற்கு காவல்துறையும், அரசும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாதிக்கப் பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் கூறி வருவது இந்த முரசொலி கும்பலுக்கு கேட்கவில்லையா?
இல்லையென்றால் கேட்டும் கேட்காதது போன்று நடிக்கிறார்களா? நடிப்பதற்கு முரசொலி கும்பலுக்கு சொல்லியா கொடுக்கணும்.
நடிக்க தெரியவில்லை என்றால் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும், செந்தில் பாலாஜியிடமும் பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்.
உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு முரசொலி கும்பலால் பதில் சொல்ல முடியுமா?
நாங்கள் ஷூட்டிங் நடத்த வில்லை. முரசொலி கும்பல்தான் கரூர் மருத்துவமனையில் என்னென்ன இரவு நேர ஷூட்டிங் செய்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இரவோடு இரவாக நீங்கள் செய்த ஷூட்டிங்கை தான் மக்கள் பேசி வருகிறார்கள்.
முரசொலி கும்பல் இதுவரை யாரையெல்லாம் விமர்சித்து எழுதி உள்ளார்களோ அவர்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி உள்ளார்கள் என்பது கடந்த கால வரலாறு.
இன்று அண்ணன் விஜய் அவர்களை வன்மமான முறையில் விமர்சனம் செய்து வருகிறீர்கள்.
இன்று வரை மக்கள் அண்ணன் விஜய் அவர்களை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து அரவணைத்து வருகிறார்கள். முரசொலி கும்பலின் இந்த விமர்சனத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக மக்கள் அண்ணன் விஜய் அவர்களை அன்புள்ளத்தோடு நேசிக்கத்தான் போகிறார்கள். விமர்சனத்தையும், அவதூறையும் எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல.
விமர்சனத்தாலேயே வளர்ந்து வெற்றிக் கண்ட அண்ணன் விஜய் அவர்கள் உருவாக்கிய கட்சியை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ