Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)
திமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தலைமையில், கோவை ஜிஆர்டி கல்லூரி, ஆர்விஎஸ் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தமிழ் மாணவர் மன்ற மாணவர்களை கல்லூரி வாயிலில் சந்தித்து கழகத்தின் சாதனைகளை விளக்கிப் பேசியவர், மாணவர் மன்ற முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்தார்.
இந்த நிகழ்வில், கழக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், கழக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் சூலூர் பிரபு, சிவப்பிரகாஷ்,அந்தோணிராஜ் மற்றும் தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan