வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (அக் 16) தொடங்குகிறது. இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகுகிறது என்றும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (அக் 16) தொடங்குகிறது. இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகுகிறது என்றும் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று (அக் 14) நள்ளிரவு முதல் இன்று(அக் 15) அதிகாலை வரை மழை பெய்தது.இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b