Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 15 அக்டோபர் (ஹி.ச.)
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை கடந்த 9 ஆம் தேதி அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மதியம் காவல்துறையினர் விசாரணையின்போது, தப்பியோடிய தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் பெற்றோரிடம் கூறினர்.
இந்த உயிரிழப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய 2 நாட்கள் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கினை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர்.
இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் அண்ணாநகர் ஆய்வாளராக பணிபுரிந்த பிளவர் சீலா ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN