ரூ.70 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை நகரங்களில்  அமலாக்கத்துறை அதிரடி சோதனை
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.) கடந்த சில மாதங்களாக சைபர் மோசடி, வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 4 நகரங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சா
ரூ.70 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை நகரங்களில்  அமலாக்கத்துறை அதிரடி சோதனை


புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த சில மாதங்களாக சைபர் மோசடி, வங்கி கடன் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 4 நகரங்களில் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் மூலம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட சுமார் ரூ.70 கோடி வங்கி கடனை எந்த வணிக நடவடிக்கையிலும் ஈடுபடாத தனி நபரான யஷ்தீப் சர்மாவிற்கு திருப்பி விடப்பட்டது தொடர்பாக விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதில் யஷ்தீப் சர்மா மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் வளாகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்த கட்டிடங்கள் போன்றவற்றில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM