பீகார் தேர்தல் தொடர்பாக மின்னணு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு சான்றிதழ் பெற வேண்டும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.) பீகார் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில், தேர்தல் ந
பீகார் தேர்தல் தொடர்பாக மின்னணு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு சான்றிதழ் பெற வேண்டும் - தேர்தல் ஆணையம் அறிக்கை


புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)

பீகார் சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி, தேர்தல் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,

வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில், தேர்தல் நடக்கும் பகுதிகளில் டி.வி., கேபிள் டி.வி., சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடவும், மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பவும், ஆடியோ, வீடியோ செய்தி வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தளம் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு அவற்றுக்கு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின்போது தங்களது நம்பகமான சமூக வலைத்தள கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையதள பிரசார செலவு விவரங்களை தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM