பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவைகளில் மாற்றம்
தென்காசி, 15 அக்டோபர் (ஹி.ச.) பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, (வண்டி எண்: 16846) செங்கோட்டை - ஈரோடு இடையே இய
Train


தென்காசி, 15 அக்டோபர் (ஹி.ச.)

பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி,

(வண்டி எண்: 16846) செங்கோட்டை - ஈரோடு இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலானது, அக்டோபர் மாதம் 15, 19, 20, 21, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரை முழுமையாக இயக்கப்படும்.

மற்ற தேதிகளில் மதுரை - திண்டுக்கல் இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,

(வண்டி எண் :16845) ஈரோடு - செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில் சேவையானது அக்டோபர் மாதம் 14, 18, 19, 20, 21, 28 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக இயங்கும்.

மற்ற தேதிகளில் திண்டுக்கல் - மதுரை இடையே மட்டும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் - ஈரோடு இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN