உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
பெங்களூர், 15 அக்டோபர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், ஹெப்ரி தாலுகா ஹட்டூர்கேயில் பகுதியை சேர்ந்தவர் கோபால் பண்டாரி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவர் இறந்துவிட்டார். இவருடைய மகன் சுதீப் (வயது 48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்
உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


பெங்களூர், 15 அக்டோபர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், ஹெப்ரி தாலுகா ஹட்டூர்கேயில் பகுதியை சேர்ந்தவர் கோபால் பண்டாரி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவர் இறந்துவிட்டார்.

இவருடைய மகன் சுதீப் (வயது 48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சுதீப் மதுபானக்கடை நடத்தி வந்தார். மேலும் சில தொழில்களையும் அவர் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் அங்குள்ள பர்கூர் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM