Enter your Email Address to subscribe to our newsletters
திருவனந்தபுரம், 15 அக்டோபர் (ஹி.ச.)
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ரைலா ஒடிங்கா (வயது 80) 2008 முதல் 2013ம் ஆண்டு வரை பிரதமராக செயல்பட்டுள்ளார்.
கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா தனது மகள் மற்றும் தனது மருத்துவருடன் அண்மையில் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவ மையத்திற்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.
இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் இன்று (அக் 15) காலை நடைப்பயிற்சியின் போது ஒடிங்கா சரிந்து விழுந்தார். கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
ரைலா ஒடிங்கா இன்று காலை 9.52 மணியளவில் இறந்துவிட்டதாக ஆயுர்வேத மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ரைலா ஒடிங்காவின் உடலை கென்யாவுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b