தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலி – விவசாயி வேதனை
கிருஷ்ணகிரி, 15 அக்டோபர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ் (55). 10 ஆடுகளை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் இவர் வழக்கம்போல் மேய்ச்சலை முடித்துவிட்டு வீட்டின் அருகே ஆடுகளை கட்டிவைத்துள்
ஆடு


கிருஷ்ணகிரி, 15 அக்டோபர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ் (55).

10 ஆடுகளை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் இவர் வழக்கம்போல் மேய்ச்சலை முடித்துவிட்டு வீட்டின் அருகே ஆடுகளை கட்டிவைத்துள்ளார்.

அப்போது அங்கே இருந்த 10ற்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து திடீரென கட்டி வைத்துள்ள ஆடுகளை தாக்கியுள்ளனர்.

ஆடுகளின் சப்தம் கேட்டு வீட்டை விட்டு வெளேயே வந்து பார்ப்பதற்குள்ளாக, 4 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.

இதனால் விவசாயி தேவராஜ் வாழ்வாதாரம் இழந்து வேதனையில் உள்ளார்.

சந்தூர் கால்நடை மருத்துவர் சந்தோஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடற்கூறு ஆய்வு செய்தார் மேலும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு படுகாயம் நிறைந்த ஒரு ஆட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்.

தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Hindusthan Samachar / Durai.J