Enter your Email Address to subscribe to our newsletters
விசாகப்பட்டினம், 15 அக்டோபர் (ஹி.ச.)
உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு கூகுளின் ஏஐ மையம் உதவும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப் பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
ஆந்திராவில் ஏற்கனவே அதானி குழுமம் ரூ.18,900 கோடியும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 5,001 கோடியும் முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில், ஆந்திராவிற்கு மேலும் ஒரு ஜாக்பாட்டாக கூகுள் நிறுவனத்தின் முடிவு அமைந்துள்ளது.
உலகளவில் அனைத்துத் துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஏஐ குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான், இந்தியாவில் தனது தரவு மையத்துக்கான முதலீட்டை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது
Hindusthan Samachar / JANAKI RAM