கோவையில் சிறிது நேரம் பெய்த கன மழை - குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.) கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. தெற்கு கடல
Heavy rain for a short while in Coimbatore: Pleasant cool weather brings joy to the public, but business activities affected!


கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இதை அடுத்து இன்று காலை முதல் வெயில் காணப்பட்ட நிலையில் பிற்பகலுக்கு மேல் வானம் மேகமூட்டம் ஏற்பட்டு, நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிது நேரம் கன மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் வாட்டி எடுத்தது வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது.

மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிற்பகலில் பெய்த கன மழையால் சிறிது நேரம் வியாபாரம் பாதித்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / V.srini Vasan