கோவை டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கோடிக் கணக்கில் மோசடி செய்த ஆசாமியை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.) கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி வாங்க
In Coimbatore, CBI officers arrested a suspect who had committed fraud worth crores of rupees in cities including Coimbatore and Delhi.


In Coimbatore, CBI officers arrested a suspect who had committed fraud worth crores of rupees in cities including Coimbatore and Delhi.


கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32).

இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார்.

மேலும் மத்திய அரசில் பணி வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

பல்வேறு இடஙகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு கோவையில் சித்திரவேல் தங்கி இருப்பது குறித்து டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மடக்கிப்பிடிக்க திட்டமிட்டனர்.

நேற்று விமானம் மூலம் கோவை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கி இருந்த வீட்டில் இரவில் சோதனை நடத்தி மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

சி.பி.ஐ. அதிகாரி தோற்றத்தில் போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சித்திரவேலை, மத்த்திய ஆயுதப்படை போலீசாரின் உதவியுடன் தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது.

இன்று(புதன்கிழமை) சித்திரவேலை, கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

பின்னர் கோர்ட்டு அனுமதியின்பேரில் அவரை டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கோடிக்கணக்கில் மோசடியில் தொடர்புடையவரை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan