Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 15 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தாய் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடனசபாபதி. இவர் பீளமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி வடிவுக்கரசி கீழத்தேனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் இவரது மகள் ஜனனி, சின்னசேலம் அருகே உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் அனைவரும் இன்று வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற நிலையில் பணி முடிந்து மாலை நடன சபாபதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மரக்கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக நடன சபாபதி தியாகதுருகம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நடனசபாபதியின் பக்கத்து வீட்டின் மாடி வழியாக நடன சபாபதியின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்து, பீரோவை உடைத்து, 80 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN