Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச)
தங்களது நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படதயாரிப்பிற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளது.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மகுடம் என்ற படத்தில் நடிப்பதற்காக விஷால் பெறும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ