Enter your Email Address to subscribe to our newsletters
கிருஷ்ணகிரி, 15 அக்டோபர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்ட்டி, எர்ரம் பட்டி கரடிஊர் ஆமணக்கம்பட்டி பாரூர் சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர், சந்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சாமந்தி பூ விவசாயம் செய்து வருகின்றனர்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்த விஷேச தினங்கள் வருவதை முன்னிட்டு சாமந்திப்பூ விவசாயம் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று கிலோ 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவு சாமந்திப்பூ நடவு செய்திருந்தன.
ஆனால் இந்த ஆண்டு கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுவதால், பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாமல் அறுவடை செய்யாமலே தீபாவளி அன்று விற்பதற்காக காத்திருந்த நிலையில் பருவம் தவறி மழை பெய்ததால் பூக்கள் கருகிய நிலையில் உள்ளது.
இதனால் தங்களது விளை நிலங்களிலேயே பூக்களை அழித்து வருகிறோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J