மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாணவியின் ஆண் நண்பருக்கு தொடர்பு - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
கொல்கத்தா, 15 அக்டோபர் (ஹி.ச) மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி இரவு தன் ஆண
மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாணவியின் ஆண் நண்பருக்கு தொடர்பு - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி


கொல்கத்தா, 15 அக்டோபர் (ஹி.ச)

மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

இவர் கடந்த 10ம் தேதி இரவு தன் ஆண் நண்பர் ஒருவருடன் அந்த மாணவி தன் ஆண் நண்பர் ஒருவருடன் வௌியே சென்று உணவருந்தி விட்டு விடுதிக்கு திரும்பினார். அப்போது ஆண் நண்பரை விரட்டி விட்டு மாணவியை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை துர்காபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை தனியே விட்டு சென்ற அவரது காதலனிடம் நேற்று(அக் 14) காவல்துறையினர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பரான வாசிப் அலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அலியின் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. அவரை போலீசார் கோர்ட்டில் இன்று (அக் 15) ஆஜர்படுத்துகின்றனர்.

இந்த வழக்கில் மாணவியை ஒருவரே பலாத்காரம் செய்திருக்கிறார் என்றும் கூட்டு பலாத்காரம் நடைபெறவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என காவல் ஆணையாளர் சுனில் குமார் சவுத்ரி கூறுகிறார்.

இதனால், இந்த வழக்கில் ஆண் நண்பரே சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b