Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 15 அக்டோபர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இவரது ஆட்டோவை நேற்று தேவர்குளம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்
இதைத் தொடர்ந்து இவரது மனைவியும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற தர்மராஜ், தனது வாகனத்தை எதற்காக பறிமுதல் செய்து உள்ளீர்கள்? எனது மனைவியும் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் வைத்துள்ளார்கள்? என்று அங்கு இருந்த போலீசாரிடம் கேட்டபோது, அங்கிருந்த காவலர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமடைந்த தர்மராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த 5 லிட்டர் கேனில் டீசலை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றினார் அதன் பிறகு தீப்பெட்டியை எடுத்து தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்புக்கு நின்று போலீசார் தீப்பெட்டியை பறித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது வாகனத்தையும் பறிமுதல் செய்து, எனது மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் காவலர்கள் தொந்தரவு செய்வதால் நான் மனமடைந்துள்ளேன்.
ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் நேரடியாக பேச வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பாக சிறிது நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN