மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை, 15 அக்டோபர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கனமழை பெய்து வ
Manimuthar Falls


நெல்லை, 15 அக்டோபர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்தானது அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் அருவிகளை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மணிமுத்தாறு அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN