Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 15 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று
(அக் 15)
அனுசரிக்கப்படுகிறது.
அவரது பிறந்த நாளை இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து நாட்டுக்கு கலாம் ஆற்றிய பங்களிப்பை போற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். இளைய தலைமுறையினரின் மனங்களைத் தூண்டி, பெரிய கனவு காணவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை தூண்டியவராக அவர் நினைவு கூரப்படுகிறார்.
வெற்றிக்கு பணிவும், கடின உழைப்புமே மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட கனவான வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் மனிதநேயமிக்க இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.
இவ்வாறு அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b