Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோவை மாவட்ட குழு சார்பில் போதைக்கு எதிராக - மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவையில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதர் சங்க மாநில குழு உறுப்பினர் எஸ்.ராஜலக்ஷ்மி தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.உஷா, மாநில குழு புரவலர் என்.அமிர்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையிலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். இளைஞர்களையும், மாணவர்களையும் சீரழிக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் போதைப் பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திட வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கும் நேரத்தை பிற்பகல் 2.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரைக்கும் என்று முறையாக குறைத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோஷமிட்டனர்.
இந்நிகழ்வில் மாநில குழு உறுப்பினர் எம்.அமுதா, மாவட்ட பொருளாளர் கே. தங்கமணி மாவட்ட நிர்வாகிகள் என். ரேவதிகே.ஜீவாமணி, என் புஷ்பலதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan