திருப்பூர் ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) வரதண்டனை கொடுமை காரணமாக திருப்பூர் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கவின் குமார் மீது திருப்பூர் போலிசார் பதிவு செய்த வழக்கில் வீட்டில் கண்டெடுத்த ரிதன்யாவின் இரண்டு மொபைல்களை சோதனை செய்ய கோரி ரிதன்யாவின் கணவர் கவின்கும
rithanya


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

வரதண்டனை கொடுமை காரணமாக திருப்பூர் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கவின் குமார் மீது திருப்பூர் போலிசார் பதிவு செய்த வழக்கில் வீட்டில் கண்டெடுத்த ரிதன்யாவின் இரண்டு மொபைல்களை சோதனை செய்ய கோரி ரிதன்யாவின் கணவர் கவின்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ