Enter your Email Address to subscribe to our newsletters
விருதுநகர், 15 அக்டோபர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் தலித்திகா(20), மாரனேரி மகாலெட்சுமி (42) திருநங்கைகள் இருவரும் மாநகர பேருந்து நிலையம் பின்புறமுள்ள தனியார் பாரின் வெளியே இரவு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது பாரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்து (30) வெளியே வந்தார். வெளியே நின்று இருந்த திருநங்கைகள் இருவர், இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இளைஞர் பணம் தர மறுக்கவே அவரிடமிருந்து ரூ.20,000 பணத்தை எடுத்து பறித்துச் சென்றனர். இதுகுறித்து இளைஞர் ஆனந்து மாநகர போலீசில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் பணத்தைப் பறித்துச் சென்ற இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலித்திகா, மகாலெட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN