கோவை-ஜெய்ப்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறுகை
கோவை-ஜெய்ப்பூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்


கோவை, 15 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,

கோவை-ஜெய்ப்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் எண் (06181) நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற நவம்பர் 6-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக காலை 5.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.

இதேபோல் மறு மார்க்கத்தில் ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் எண் (06182) வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சேலம் வந்தடையும்.

இங்கிருந்து 5.53 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b