கரூரில் துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) தமிழக சட்டசபைக்கூட்டத் தொடர் 2வது நாளாக இன்று (அக் 15) கூடியது. அவையில் முக்கிய நிகழ்வாக கரூர் சம்பவம் பற்றிய விவாதம் இடம்பெற்றது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார
கரூரில் துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை - முதல்வர் ஸ்டாலின்


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக சட்டசபைக்கூட்டத் தொடர் 2வது நாளாக இன்று (அக் 15) கூடியது. அவையில் முக்கிய நிகழ்வாக கரூர் சம்பவம் பற்றிய விவாதம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார். அவர் பேசிய அந்த உரையில்,

கரூர் சம்பவத்தில் நடந்தது என்ன? அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள், கரூருக்கு தான் சென்ற விவரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களுடன் தெரிவித்தார்.

மொத்தம் அவரின் உரை 16 நிமிடங்கள் அடங்கி இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் விளக்கத்தில் எந்த இடத்திலும் நடிகர் விஜய் பெயரை அவர் உச்சரிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b