நெல் கொள்முதல் செய்வதில் இடர்பாடுகள் - மழையில் நனைந்து நெல் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை
தென்காசி, 15 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கார் நெல் சாகுபடியானது பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை ச
Paddy Harvesting


தென்காசி, 15 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கார் நெல் சாகுபடியானது பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்மணிகளானது கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் உரிய நேரத்தில் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக காத்திருந்து நெல்மணிகளை விற்பனை செய்கின்ற அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, போதுமான சாக்கு வசதிகள், நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாட்கள் பற்றாக்குறை, தார்ப்பாய் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்வதற்கு காலதாமதமும் ஆவதால் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை கொள்முதல் நிலையம் அருகே உள்ள சாலைப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குவித்து வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இருந்தபோதும், தற்போது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழையானது பெய்து வரும் நிலையில், நெல்மணிகள் மழையில் நனைந்து ஒரு சில இடங்களில் முளைத்துள்ளது.

உதாரணமாக, தென்காசி நகரப் பகுதியின் மிக அருகாமையில் உள்ள கீழப்புலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் நீண்ட நாட்களாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை குவியல், குவியலாக குவித்து வைத்து கொள்முதலுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவல நிலை தற்போது தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN