Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக இன்று காலை (15.10.2025 ) முதல் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை போக்குக்கவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
KPS சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம்போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது.
i) அதன்படி KPS சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு வழியாக எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் TPK ரோடு ஜம்ஜம் ஸ்வீட்ஸ் சந்திப்பில் இடது புறம் திரும்பி மேலவடம்போக்கி தெரு வழியாக DM கோர்ட் சந்திப்பிற்கு சென்று மேலமாசிவீதி செல்ல வேண்டும்.
ii) DM கோர்ட் சந்திப்பிலிருந்தும் கூடலழகர் பெருமாள் கோவில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக TPK ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் DM கோர்ட் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக TPK ரோடு செல்ல வேண்டும். மேலவடம்போக்கி தெருவில் எந்த ஒரு வாகனமும் தீபாவளி வரை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
iii) ஜான்சி ராணி பார்க் முதல் முருகன் கோவில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூலவீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி ரோடு முருகன் கோவில் செல்லாமல் மீனாட்சி பேருந்து நிலையம், கான்சாமேட்டுத்தெரு, DM.கோர்ட், மேலமாசிவீதி வழியாக முருகன் கோவில் சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மேலமாசிவீதியிலிருந்து ஆரியபவன் சந்திப்பு வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் முருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லாம்.
iv) பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து எந்த ஒரு வாகனங்களும் நேதாஜி ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோவில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம்.
பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இம்மாறுதலுக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b