திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிர
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கு இன்று முதல் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06190) வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 5 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று (அக் 15) முதல் நின்று செல்லும்.

திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருவெறும்பூருக்கு காலை 5.54 வந்து பின்னர் 5.55 புறப்பட்டு தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக தாம்பரம் - திருச்சி சிறப்பு ரெயில் (வண்டி எண்:06191) தாம்பரத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.43 மணிக்கு திருவெறும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். பின்னர் இரவு 9.44 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

இந்த ரெயில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை உள்ளிட்ட 5 நாட்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b