கரூரில் உயிரிழந்த நபர்களுக்கு தவெக சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டம்
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.) கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதி சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என்ற
Tvk


Nagai tvk


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)

கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதி சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு முன்னதாக இந்த வாரத்தில் மெழுகு வர்த்தி ஏந்தியும், மலர் தூவி அஞ்சலி செலுத்தி, உயிரிழந்த நபர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் விரைவில் இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ