Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (அக் 15) சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோபி.செழியன், துணை மேயர் மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ராஜாராம், உயர் கல்வித் துறை செயலாளர் சங்கர், மக்கள் செய்தி தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி தொடர்புடைய புகைப்படங்களை தனது இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!
உயர்கல்விக்காக நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b