Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம், மின்வாரியம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கப் பணியாளருக்கு 20 சதவீத தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.
உபரி தொகை இல்லாத சங்கங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் மற்றும கருணைத் தொகை வழங்கப்படும். அதேபோல, நிகர லாபம் ஈட்டாத பணியாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b