Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
இதை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று கரூர் துயரம், கிட்னி திருட்டு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் பாஜக, அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3வது நாளான இன்று
(அக் 16) சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்று எழுதி இருந்த பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
கிட்னி மோசடியில் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசை கண்டிப்பதாக கூறி, இந்த பேட்ஜ் அணிந்து இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
இதே போல் பாமக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b