Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு என் பள்ளி! என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், இந்த நாளை பள்ளிகளுக்கு சென்று கொண்டாடியவர் நம்முடைய முதலமைச்சர் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு 70-க்கும் அதிகமான திட்டங்களை நாம் கொண்டுவந்துள்ளோம் என் கூறிய அவர் தமிழ்நாட்டு ஆசிரியர்களைப் போல் உலகில் எவரும் இல்லை என்றார்.
மேலும் பேசிய அவர்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி விளம்பரப்படுத்துவதற்காக நடத்தியது அல்ல, உங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை தற்போது உள்ள மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும்
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பகுத்தறிந்து பார்க்கக் கூடியவர்கள் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
பள்ளிக் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகள் பின்பற்றுவதாகவும்
மற்ற நாட்டில் இருக்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையை திரும்பிப் பார்க்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்றும் ஒன்றிய அரசே தமிழ்நாட்டின் கல்விக் துறையை பாராட்டுவதாகவும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உள்ளவர்களே தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள், வெளிநாடு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றுகிறார் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்து இத்தனை பேர் வந்து பேசுவதாக கூறுவதாகவும்
இது திமுக விற்கு மட்டும் பெருமை அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே பெருமை என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ