Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 16 அக்டோபர் (ஹி.ச.)
குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் புதூர் வட்டார அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதூர் வட்டார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எம் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டி.ஜெயராணி முன்னிலை வகித்தார்.
சிஐடியு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்கத் தலைவர் ஜோதி, வட்டார நிர்வாகிகள் உமா, ரேணுகா உள்ளிட்ட ஏராளமான ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது,
புதூர் வட்டாரத்தில் 96 அங்கன்வாடி மையங்களில் 30க்கும் மேற்பட்ட உதவியாளர்களும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த காலி பணியிடங்களில் இதர பணியாளர்களும் ஊழியர்கள் பொறுப்பு வைத்து இரண்டு மையங்களை பார்த்து வரும் நிலை உள்ளது.
ஒரு மையத்தில் பணிகளை முடித்துவிட்டு இன்னொரு மையத்தில் பணிகள் செய்கிற போது இரண்டு மையங்களிலும் ஆய்வு என்ற பெயரில் பணியாளர் மையத்தில் . ஊழியர் இல்லை உதவியாளர் மையத்தில் இல்லை என்று மோமோ கொடுக்கப்படுகிறது.
மேலும், அமைச்சர், மேலதிகாரியை சந்திக்கக் கூடாது எனவும் கடுமையாக எச்சரிக்கையும் மிரட்டியும் வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J