தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? - உயர்நீதிமன்றம்
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச) தெரு நாய் விவகாரம் குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம்
High


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)

தெரு நாய் விவகாரம் குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளிக்கவும் மனுதாரருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், இயக்குனர், நெறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பிரகாஷ் காந்த் தாக்கல் செய்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விவாத நிகழ்ச்சிக்கு பின் திருப்பூர், நாமக்கல்லில் தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ