தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச) தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை., கண்காணிப்பு கே
Police


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை., கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில் நிலையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

அணிவகுத்து நின்ற போலீசாருக்கு., எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

அடுத்து ரயில் நிலையங்கள் முழுவதிலும் எந்த ஒரு குற்ற சம்பவமோ, அசம்பாவிதமோ நடைபெறாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ