இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம் - படத்தயாரிப்பு நிறுவனம்
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.) குட் பேட் அக்லி'' திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குட் பேட் அக்
Gbu


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)

குட் பேட் அக்லி' திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது

சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என இளையராஜா தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ