ஜன்னல் கம்பிகளை அறுத்து நகைக் கடையில் திருட முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் - ரூபாய் 5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.) கோவை, பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பின்புற ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து சுமார் ரூபாய் ஐந்து கோடி மதிப்பு உள்ள நகைகளை திருட முயற்சி நடந்து இருந்தது.
In Coimbatore, a man from Assam who tried to rob a jewelry shop by cutting through a window was arrested; jewelry worth ₹5 crore was saved — the police captured the culprit using CCTV footage


In Coimbatore, a man from Assam who tried to rob a jewelry shop by cutting through a window was arrested; jewelry worth ₹5 crore was saved — the police captured the culprit using CCTV footage


கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)

கோவை, பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பின்புற ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து சுமார் ரூபாய் ஐந்து கோடி மதிப்பு உள்ள நகைகளை திருட முயற்சி நடந்து இருந்தது.

இதுகுறித்து நகைக் கடை உரிமையாளர் பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் அந்த பகுதியில் இருந்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய புலன் விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மீதும் நமதாஸ் என்பது தெரிய வந்தது.

இதை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி, துணையானவர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை பிடிக்க அசாம் மாநிலத்திற்குச் சென்றனர்.

பின்னர் அங்கு பதுங்கி இருந்த மீதும் நமதாஸ் மடக்கி பிடித்த காவல் துறையினர் அவரிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றி, கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு சாதனங்கள், சி.சி.டி.வி கேமரா, அலாரம், இரவு காவலர்கள் ஏற்படுத்தி எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகப்படும்படி நபர்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாநகர காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan