Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 16 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளது.
இதை கருத்தில் கொண்டு மேற்படி நாட்களில் மலைக் கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பக்தர்கள் மலைப் படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் செந்தில்குமார் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி உள்ளார்.
Hindusthan Samachar / V.srini Vasan