Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (16.10.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை மேயர் ஆர்.பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்பணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, (IDBI) வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் தலா ரூ.10.43 லட்சம் என மொத்தம் ரூ.52.17 லட்சம் மதிப்பீட்டிலான 5 நாய் பிடிக்கும் வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கபப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, துணை ஆணையாளர் (வருவாய் மற்றும் நிதி) பிரதிவிராஜ், நிலைக் குழுத் தலைவர்கள் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), சர்பஜெயாதாஸ் (வரி விதிப்பு (ம) நிதி), த.விஸ்வநாதன் (கல்வி), ஐடிபிஐ வங்கியின் மண்டல தலைமை பொது மேலாளர் மஞ்சுநாத் பாய், ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியின் துணைத் தலைவர் டி.அஞ்சான், மண்டல மேலாளர் யு.கமல்நாத் மற்றும் மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Hindusthan Samachar / vidya.b