Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்பணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக,
IDBI வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக 23 எண்ணிக்கையில் நாய் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன . இந்நிலையில்,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் தலா ரூபாய் 10.43 இலட்சம் என மொத்தம் ரூபாய் 52.17 இலட்சம் மதிப்பீட்டிலான 5 நாய் பிடிக்கும் வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா பேசியதாவது,
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது, மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது, தற்போது 60% பணிகள் முடிந்துள்ளது, அதேபோல் நாய்களுக்கு சிப் பொருத்தக்கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.
மண்டலத்துக்கு ஒரு கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிய உள்ளது, பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறார்கள் அதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகிறது, பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர், தெரு நாய்கள் கருத்தடையை கட்டுப்படுத்தும் போது நாய்கள் தொல்லை குறையும் என கூறினார்.
பருவமழை தொடங்க உள்ளது. மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடிந்துள்ளா என்ற கேள்விக்கு,
2022 ஆம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது, ஒரு சில பகுதியில் மழை நீர்வாடிக்கால் பணிகள் முடிந்துள்ளது, தற்பொழுது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றது.
தற்பொழுது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி ஜனவரிக்கு பிறகு மேற்கோள்ள அறிவுறுத்தி உள்ளோம், சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழை கால கட்டுபாட்டு மையத்தில் பெறப்படும் புகார்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு,
கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ