ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
ஸ்ரீசைலம், 16 அக்டோபர் (ஹி.ச.) ஆந்திராவின் கர்னூலில் சுமார் 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று (அக் 16) காலை பிரதமர் மோடி ஆந்திரா சென்றார். ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பிரதமர் மோட
ஸ்ரீசைலம்  ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு


ஸ்ரீசைலம், 16 அக்டோபர் (ஹி.ச.)

ஆந்திராவின் கர்னூலில் சுமார் 13,430 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று

(அக் 16) காலை பிரதமர் மோடி ஆந்திரா சென்றார்.

ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை வரவேற்றார்.பின்னர் பிரதமர் நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்து பூஜை மற்றும் தரிசனம் செய்தார்.

12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றும் 52 சக்தி பீடங்களில் ஒன்றுமான ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமருக்கு ஸ்ரீ சுவாமி மற்றும் பிரம்மராம்ப தேவியின் உருவப்படங்கள் மற்றும் வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், சத்ரபதி சிவாஜி மகாராஜின் மரபை நினைவுகூரும் வகையில் ஸ்ரீ சைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவிற்கு மோடி சென்றார்.

சுவாமி தரிசனம் குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது,

ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b