நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளான இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று பி
Eps and nainar


Tweet


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளான இன்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று பிறந்தநாள் காணும் பாஜக மாநிலத் தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்று இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ