Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச)
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (14.10.2025) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையே நேற்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று (16.10.2025) 3 ஆம் நாள் கூட்டம் தொடங்கியுள்ளது.
சட்டசபைக் கூட்டத்தொடரில் கடந்த 14 ஆம் தேதி பங்கேற்க வந்த அன்புமணி தரப்பு பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டப்பேரவை பாமக குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும். எம்எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்டும். தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனைபேரவை பாமக குழு தலைவராகவும், மயிலம் எம்எல்ஏ சிவகுமாரை கொறடாவாகவும் நியமிக்க வேண்டும் கோஷமிட்டனர்.
அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று (அக் 16) கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மூவரும் கருப்புச் சட்டை அணிந்தபடி ஒன்றாக சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
எங்களது கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரவையில் பாமக குழு தலைவர், துணை தலைவர் மற்றும் கொறடாவுக்கு இருக்கைகளை தனியாக வழங்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பின்னர் பேசி கொள்ளலாம் என்று பேரவை தலைவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b