ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.) பருவமழையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரிசியை முன்கூட்டியே பெறாதவர்கள் வழக்கம்போல நவம்பரில் பெற்றுக் கொள்ளலாம். இ
ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)

பருவமழையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாத அரிசியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரிசியை முன்கூட்டியே பெறாதவர்கள் வழக்கம்போல நவம்பரில் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவு பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம். இதனை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்று கொள்ளலாம்.

அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12-35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாதம் அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெற்றாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12- 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேய பெற்று கொள்ளலாம்.

நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்குரிய அரிசியினை பெற்று கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b