செங்கோட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் கிடந்த இளம் சிசுவின் உடல்
தென்காசி, 16 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்தில் 1-வது பிளாட்ஃபார்ம் அருகே உள்ள தண்டவாளத்தில் இளம் சிசுக் குழந்தையின் உடல் ஒன்று கிடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், தகவலின் பேரில் விரைந்து
Newborn baby death


தென்காசி, 16 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்தில் 1-வது பிளாட்ஃபார்ம் அருகே உள்ள தண்டவாளத்தில் இளம் சிசுக் குழந்தையின் உடல் ஒன்று கிடப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர், சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில், செங்கோட்டை ரயில்வே போலீசார் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கிடந்த இளம் சிசு குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த இளம் சிசு குழந்தையின் உடலை நாய் ஒன்று இழுத்தபடி வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN