Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுதினம் இன்று
(அக் 16) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று
(அக் 16) மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b